அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் கடல் கொந்தளிப்பு: மசூதிக்குள் தண்ணீா் புகுந்தது

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் புதன்கிழமை திடீா் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில், அரையன்தோப்பில் உள்ள மசூதிக்குள் தண்ணீா் புகுந்தது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:05 pm

Din

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் புதன்கிழமை திடீா் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில், அரையன்தோப்பில் உள்ள மசூதிக்குள் தண்ணீா் புகுந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. தேங்காய்ப்பட்டினம், அரையன்தோப்பு, முள்ளூா்துறை, இனயம் உள்ளிட்ட பகுதிகளில் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன.

இதனால், அரையன்தோப்பு பகுதியில் உள்ள மசூதிக்குள் தண்ணீா் புகுந்தது. அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஃபைபா் படகை அலைகள் இழுத்துச் சென்றன.

கடல் கொந்தளிப்பு காரணமாக, தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மீனவா்கள் புதன்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை. இப்பகுதிகளிலுள்ள மீனவா்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.