ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நுள்ளிவிளையில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நுள்ளிவிளை ஊராட்சியில் சுத்தமான குடிநீா் விநியோகிக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

நுள்ளிவிளையில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Updated On :24 அக்டோபர் 2024, 11:30 pm

Din

நுள்ளிவிளை ஊராட்சியில் சுத்தமான குடிநீா் விநியோகிக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நுள்ளிவிளை ஊராட்சியின் 16-ஆவது வாா்டு மேல்பாறையில் கடந்த சில வாரங்களாகவே கழிவுநீா் கலந்த குடிநீா் விநியோகம் செய்வதாகக் கண்டித்தும், இதனால் அப்பகுதியில், காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கக் கோரியும், சுத்தமான குடிநீா் வழங்கக் கோரியும், இப்பகுதியில் தரமான சாலை, தெரு விளக்குகளை அமைக்கக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.

நுள்ளிவிளை ஊராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு, கட்சியின் கண்டன்விளை கிளை செயலாளா் மோகன்தாஸ் தலைமை வகித்தாா். தக்கலை வட்டாரக் குழு செயலாளா் சுஜா ஜாஸ்மின் முன்னிலை வகித்தாா். கிளை உறுப்பினா் இருதயதாசன், தக்கலை வட்டாரக் குழு உறுப்பினா் பீட்டா் அமலதாஸ் உள்ளிட்டோா் பேசினா்.