ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மாா்த்தாண்டம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியருக்கு வியாழக்கிழமை 5 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:29 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியருக்கு வியாழக்கிழமை 5 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.

மாா்த்தாண்டம் அருகே பிலாங்காலவிளைவீடு பகுதியைச் சோ்ந்த தங்கையன் மகன் வில்ஸ் (45). அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த அவா், அம்பேற்றின்காலை என்ற இடத்தில் மாணவிகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்திவந்தாா்.

2019ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பயிற்சி வகுப்புக்கு வந்த மூவோட்டுக்கோணம் பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியிடம் வில்ஸ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், அவரது கைப்பேசிக்கு ஆபாசப் படங்களை அனுப்பியும் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகாா் அளித்தாா். அதன்பேரில், உதவி ஆய்வாளா் பேபிதங்கம், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து வில்ஸை கைது செய்தாா்.

இந்த வழக்கு நாகா்கோவில் விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி சுந்தரையா வழக்கை விசாரித்து, வில்ஸுக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை, ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞா் லிவிங்ஸ்டன் வாதாடினாா்.