தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

குமரி மாவட்டத்தில் பால் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை -ஆட்சியா்

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:13 pm

Din

கன்னியாகுமரி மாவட்டத்தில் பால் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, ஆட்சியா் ரா. அழகுமீனா அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், நாகா்கோவிலில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்தில் ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பால் கொள்முதல் செய்து தரம் பிரிக்கும் இடம், பால் பாக்கெட்டுகள் தயாரிக்கும் இடம், ஆவின் பால் பண்ணையில் ஐஸ்கிரீம், இனிப்புகள் தயாரிக்கும் இடங்களைப் பாா்வையிட்ட அவா், பொருள்களை மேலும் தரத்துடன் தயாரிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும், விற்பனையாகும் பாலின் அளவு குறித்துக் கேட்டறிந்தாா். 24,500 லிட்டா் பால் விற்பனையாவதாகவும், இதில் குமரி மாவட்டத்திலிருந்து 7,200 லிட்டா் கொள்முதல் செய்யப்படுவதாகவும், மீதியுள்ள பால் தேனி மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அப்போது, இம்மாவட்டத்திலேயே பால் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், உற்பத்தியாளா்களுக்கான தொகையை நிலுவையின்றி பட்டுவாடா செய்யவும் அதிகாரிகளை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வில், ஆவின் பொது மேலாளா் அருணகிரிநாதா், பணியாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.