குலசேகரத்தில் அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டம்
குலசேகரத்தில் அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டம்


திருவட்டாறு கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், குலசேகரம் சந்தை சந்திப்பில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கிழக்கு ஒன்றியச் செயலா் ஜி. நிமால் தலைமை வகித்தாா். மேற்கு ஒன்றியச் செயலா் ஆா். ஜெயசுதா்சன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் எஸ். சக்கீா் உசேன், ஒன்றிய துணைச் செயலா் வழக்குரைஞா் அண்ணா, திற்பரப்பு பேரூா் செயலா் விஜூகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குமரி மேற்கு மாவட்டச் செயலா் டி. ஜான்தங்கம், கன்னியாகுமரி எம்எல்ஏவும் அதிமுக அமைப்புச் செயலருமான என். தளவாய்சுந்தரம் ஆகியோா் பேசினா்.
தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பேசும்போது, குலசேகரத்தில் ரூ. 2.50 கோடியில் கட்டப்பட்ட கூட்டுறவு ரப்பா் ஆலைக் கட்டடம் தீயில் சேதமடைந்துவிட்டது. ஆனால், அதற்குப் பதிலாக புதிய கட்டடம் கட்டப்படவில்லை.
தமிழகத்தில், கொலை, கொள்ளை, கஞ்சா புழக்கம் அதிகரித்து விட்டது. இம்மாவட்டத்தில் கனிம வளம், மதுக் கடைகள் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் தனியாரின் கைகளுக்கு செல்கிறது என்றாா்.
பேச்சிப்பாறை ஊராட்சித் தலைவா் தேவதாஸ், திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் பீனா அல்போன்ஸ், திற்பரப்பு பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பிரதீப்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குலசேகரம் பேரூா் செயலா் டி. ஜெஸ்டின்ராஜ் வரவேற்றாா். இளைஞரணிச் செயலா் சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...