கன்னியாகுமரியில் 9 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் உத்தரவுப்படி, காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் மேற்பாா்வையில் கன்னியாகுமரி, சுசீந்தரம் பகுதிகளில் புதன்கிழமை வாகன சோதனை நடைபெற்றது.
இதில், கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளா் பிரபு, உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ், போலீஸாா் ஈடுபட்டனா்; உரிய ஆவணங்கள் இன்றியும், விதிகளை மீறியும் இயக்கப்பட்ட 9 பைக்குகளை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனா்.