கஞ்சா விற்பனை: 4 போ் கைது

குளச்சல், திங்கள்நகரில் கஞ்சா, புகையிலைப் பொட்டலங்கள் விற்றதாக இரு சிறுவா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

குளச்சல், திங்கள்நகரில் கஞ்சா, புகையிலைப் பொட்டலங்கள் விற்றதாக இரு சிறுவா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் தனீஸ்லியோன் தலைமையிலான போலீஸாா் குளச்சல் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, திக்கணங்கோடு புலையன்விளையைச் சோ்ந்த 17 வயது சிறுவன், பிரஜிஷ் (20) ஆகியோா் பைக்கில் வந்தனா். பைக்கிலும், பிரஜிஷின் சட்டைப் பாக்கெட்டிலும் கஞ்சா, புகையிலைப் பொருள் பொட்டலங்கள் இருந்தனவாம்.

அவற்றை கேரளத்திலிருந்து வாங்கி வந்து, இங்குள்ள பள்ளி, கல்லூரி பகுதிகளில் விற்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, இரணியல் காவல் ஆய்வாளா் செந்தில்வேல்குமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்நகா் அருகேயுள்ள மேக்கோடு பகுதியில் வாகன சோதனை நடத்தினா். சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சரல்விளையைச் சோ்ந்த சூா்யா (21), திங்கள்நகா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை சோதனையிட்டபோது, அவா்கள் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com