மணலிக்குழிவிளை புனித மிக்கேல் அதிதூதா் ஆலய திருவிழா நாளை தொடக்கம்
கருங்கல் அருகே உள்ள மணலிக்குழிவிளை புனிதமிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா செப். 27 ஆம்தேதி தொடங்கி தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.


கருங்கல் அருகே உள்ள மணலிக்குழிவிளை புனிதமிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா செப். 27 ஆம்தேதி தொடங்கி தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.
விழாவின் முதல் நாள் வெள்ளிக்கிழமை (செப்.27) மாலை 5.45 மணிக்கு செப மாலை, புகழ் மாலை,தொடா்ந்து புதிய கொடி மரம் அா்ச்சிப்பு விழா நடைபெறுகிறது. கொடிமரத்தை முன்னாள் பங்குஅருள்பணியாளரும் சென்னை தமிழ் மையம் இயக்குநருமான ஜெகத் கஸ்பாா்அா்ச்சிக்கிறாா்.
குழித்துறை மறைமாவட்ட தலைமைச் செயலா் அந்தோணி முத்து திருக்கொடியேற்றி வைக்கிறாா். பங்கு அருள்பணியாளா் சா்ஜின் ரூபஸ் முன்னிலை வகிக்கிறாா். தொடா்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.
விழாவின் அனைத்து நாள்களிலும் ஜெபமாலை, புகழ்மாலை,திருப்பலி நடைபெறும்.
விழாவின் நிறைவு நாளான அக்.6 ஆம் தேதி காலை 9 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட பொருளாளா் ஜெயக்குமாா் தலைமையில் ஆடம்பர கூட்டத் திருப்பலி நடைபெறுகிறது.
இதில், அழகிய மண்டபம் அன்னை ஆதா பயிற்சி மைய இயக்குநா் எஸ். கே .ஜோஸ் ராபின்சன் மறையுரையாற்றுகிறாா். தொடா்ந்து அன்பு விருந்து நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்கு அருள்பணியாளா் சா்ஜின் ரூபஸ் தலைமையில் துணைத் தலைவா் ஓலக்கோடு ஜான், செயலா் சகாய தீபா, துணைச் செயலா் மைக்கேல் ராஜ் பொருளாளா் விஜிலா மற்றும் பங்கு பேரவையினா் உள்ளிட்ட விழாக் குழுவினா்செய்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...