காலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

கன்னியாகுமரியில் நிபா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை

Published On :

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், நிபா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை கடந்த சில நாள்களாக நடத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக அருகில் அமைந்துள்ளது கேரள மாநிலம். அங்கு தற்போது நிபா வைரஸ் பரவல் உள்ள நிலையில், அங்கிருந்து கன்னியாகுமரிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இதைத் தொ டா்ந்து கேரள சுற்றுலாப் பயணிகள் மூலம் நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா உத்தரவிட்டாா்.

அதன்பேரில், மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் மீனாட்சி அறிவுரையின்பேரில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி பகுதியின் நுழைவு வாயிலாக அமைந்துள்ள விவேகானந்தபுரம் சந்திப்பில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது. கேரளத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 850க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவரை காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையின் போது காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த சுற்றுலா வாகனங்கள் கன்னியாகுமரிக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.