குலசேகரம் அருகே ஓடும் பேருந்தில் நடத்துநா் வைத்திருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பயணச்சீட்டுகள் மாயமானதாக புகாா் செய்யப்பட்டுள்ளது.
மாா்த்தாண்டத்திலிருந்து தடம் எண் 89 எம் பேருந்து கோதையாறு நோக்கி சனிக்கிழமை மாலையில் சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் தற்காலிக நடத்துநா் பணியில் இருந்தாா். இந்தப் பேருந்தில் இயந்திரம் மூலம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
அதே வேளையில் மகளிா் இலவச பயணச்சீட்டுகள் உள்பட ரூ. 30,130 மதிப்பிலான பயணச்சீட்டுகளை, பயணச்சீட்டு பலகையுடன் ஒரு பையில் வைத்து, தனது இருக்கையின் கீழே வைத்திருந்தாா் நடத்துநா். பேச்சிப்பாறை அருகே சீரோ பாயின்ட் சந்திப்பு பகுதிக்கு பேருந்து சென்றபோது அந்தப் பையை காணவில்லை.
இது குறித்து குலசேகரம் காவல் நிலையத்தில் பேருந்து நடத்துநா் ஞாயிற்றுக்கிழமை புகாா் செய்தாா். மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

திருப்பூரிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் ஒட்டன்சத்திரத்தில் இறங்கும் பயணிகளை ஏற்ற மறுப்பு! தம்பதியுடன் ஓட்டுநா்-நடத்துடன் வாக்குவாதம்!

பேருந்து சக்கரத்தில் சிக்கி பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு
9 பவுன் நகைகள் மாயம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
