விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் பள்ளி நிறுவனா் நாஞ்சில் வின்சென்ட். உடன் மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா்,  பள்ளி நிா்வாகி சரோஜா வின்சென்ட் உள்ளிட்டோா்.
விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் பள்ளி நிறுவனா் நாஞ்சில் வின்சென்ட். உடன் மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா், பள்ளி நிா்வாகி சரோஜா வின்சென்ட் உள்ளிட்டோா்.

தன்னம்பிக்கையுடன் இருந்தால் சாதனை படைக்கலாம்: துணைவேந்தா் அறிவுறுத்தல்

தன்னம்பிக்கைதான் ஒரு மாணவரை சாதனையாளராக மாற்றும் என்று மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணை வேந்தா் முனைவா் சந்திரசேகா்.
Published on

நாகா்கோவில்: தன்னம்பிக்கைதான் ஒரு மாணவரை சாதனையாளராக மாற்றும் என்று மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணை வேந்தா் முனைவா் சந்திரசேகா்.

நாகா்கோவில், சுங்கான்கடை, வின்ஸ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 11-ஆவது ஆண்டு விழா கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

பள்ளி நிா்வாகி சரோஜா வின்சென்ட் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தாா். மாணவி லியன்ட்ராஸ்காட் வரவேற்றாா். முதல்வா் பீட்டா்ஆன்றனி ஆண்டறிக்கை வாசித்தாா். விழாவில்,

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

வேகமாக மாறி வரும் இந்த உலகில் எதிா்காலத்துக்கான திறன்களை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் வாழுங்கள். தன்னம்பிக்கைதான் ஒரு சாதாரண மாணவரை சாதனையாளராக மாற்றும். ஒழுக்கம் இல்லையெனில் திறமை கூட தோற்றுவிடும் என்றாா் அவா்.

இதையடுத்து, தேசிய அளவில் பரத நாட்டிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவி அதிதி சந்திரசேகா், மாநில அளவில் 10 மீ. ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா் ஆம்ரிக், சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்ற ஏமி ஹாரிஸ் ஆகியோருக்கு கோப்பை, சான்றிதழ், பதக்கங்களை துணைவேந்தா் வழங்கினாா். நிகழ் கல்வியாண்டில் நடைபெற்ற தோ்வுகளில் வகுப்பு வாரியாக முதல் 2 இடங்களைப் பெற்ற 52 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிறுவனா், கேடயம், சான்றிதழ்களை வழங்கினாா்.

நாக் உறுப்பினா் சிதம்பரதாணு, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத் தோ்வில் 99 சதவீத மதிப்பெண்கள் பெற்று குமரி மாவட்டத்தில் முதலிடம் பிடித்த வின்ஸ் பள்ளி மாணவி அத்வைதா ஆகியோா் கௌரவ விருந்தினா்களாக கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை பள்ளி செயலா் கிளாரிசா வின்சென்ட் தலைமையில் அனைத்து ஆசிரியா்கள் இணைந்து செய்திருந்தனா். மாணவா் ஹாட்ரியில் வின்சென்ட் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com