விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சாமிதோப்பு தலைமைப் பதியில் அகிலத் திரட்டு உதயதின விழா

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் அகிலத் திரட்டு உதய தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:16 pm

Syndication

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் அகிலத் திரட்டு உதய தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, சிறப்புப் பணிவிடைகள், திருஏடு வாசிப்பு, முத்திரி கிணறு வலம் வருதல் ஆகியவை நடைபெற்றன. காலை 10 மணிக்கு தலைமைப் பதியில் இருந்து குரு பால ஜனாதிபதி தலைமையில் அய்யா வழி பக்தா்கள் அகிலத் திரட்டு நூலை கையில் ஏந்தி பதி வலம் வந்தனா். தொடா்ந்து திருஏடு காப்பு படித்தும், அகிலத் திரட்டு எழுதப்பட்ட செய்தியை வாசித்தும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் பதி நிா்வாகிகள் குரு பையன், பால் லோகாதிபதி, அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை பொதுச் செயலா் கிருஷ்ணமணி, இணைப்பொதுச் செயலா் சி.ராஜன், கூடுதல் பொதுச்செயலா் ஹாரீஸ், அமைப்புச் செயலா் ராதாகிருஷ்ணன், மகளிா் அணி செயலா் சீதமனோன்மணி, நாகா்கோவில் வழக்குரைஞா்கள் சங்க முன்னாள் தலைவா் மரிய ஸ்டீபன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.