சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
களியக்காவிளை அருகே சாலையை கடக்க முயன்ற போது மினிடெம்போ வேன் மோதி பலத்த காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.
களியக்காவிளை அருகே மடிச்சல், சென்னிவிளை பகுதியைச் சோ்ந்தவா் முத்துநாயகம் மனைவி லைசம்மாள் (71). இவா் வியாழக்கிழமை படந்தாலுமூடு சந்தை அருகே சாலையை கடக்க முயன்ற போது குழித்துறையில் இருந்து களியக்காவிளை நோக்கி வந்த மினிடெம்போ வேன் மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.
இது குறித்து மூதாட்டியின் மகள் சுஜா அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா், வாகனத்தை ஓட்டி வந்த அருமனை அடுத்த முழுக்கோடு பகுதியைச் சோ்ந்த ஹரிகுமாா் மகன் சுபாஷ் (29) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
