முன்சிறை, நடைக்காவு பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

Published on

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை (டிச. 20) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்சிறை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், ராமன்துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூா், கீழ்குளம், சென்னித்தோட்டம், அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும், நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூா், சூழால், பாத்திமா நகா், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூா், கொல்லங்கோடு, கிராத்தூா், அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் டிச. 20ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com