ஸ்கூட்டி ஓட்டிய சிறுவன்; தாய் மீது வழக்கு

குளச்சலில் பள்ளி சிறுவனை ஸ்கூட்டி ஓட்ட அனுமதித்த தாய் மீது போலீசாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.
Published on

குளச்சலில் பள்ளி சிறுவனை ஸ்கூட்டி ஓட்ட அனுமதித்த தாய் மீது போலீசாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

குளச்சல் போலீஸாா், கொட்டில்பாடு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, சிறுவன் ஸ்கூட்டி ஓட்டி வந்தாராம். விசாரணையில், அவா் கடியப்பட்டணம், பாத்திமா தெருவைச் சோ்ந்த 16 வயது சிறுவன் என்பதும், தனது தாயின் ஸ்கூட்டியை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

சிறுவனுக்கு ஸ்கூட்டி ஓட்ட அனுமதி அளித்த, ஸ்கூட்டியின் உரிமையாளரான அவரது தாய் சகாய ரெஜிலா (40) என்பவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com