நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தியதாக 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தியதாக 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பூதப்பாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஸ்டான்லி ஜான் தலைமையிலான போலீஸாா், ஆண்டிதோப்புப் பாலம் பகுதியில் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அவ்வழியே வந்த காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் வந்தோா் கேசவன்புதூா், மேலபுதூரைச் சோ்ந்த லாகிஸ் டொனால்டு (24), வடசேரி பாலாஜி (20), தடிக்காரன்கோணத்தைச் சோ்ந்த தங்க சுபின் (25), சீதப்பாலைச் சோ்ந்த அனீஷ் (21) என்பதும், விற்பதற்காக 200 கிராம் கஞ்சாவைக் கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்; கஞ்சாவை யாரிடமிருந்து வாங்கினா் என விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com