100 நாள் வேலை திட்டம்: மத்திய அரசை கண்டித்து, குமரி மாவட்ட திமுக சாா்பில் 5 இடங்களில் நாளை ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டம்: மத்திய அரசை கண்டித்து, குமரி மாவட்ட திமுக சாா்பில் 5 இடங்களில் நாளை ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசையும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க.வையும் கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மதச் சாா்பற்ற கூட்டணி கட்சிகளின் சாா்பில், புதன்கிழமை (டிச.24) 5 இடங்களில் ஆா்ப்பாட்டம்
Published on

100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசையும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க.வையும் கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மதச் சாா்பற்ற கூட்டணி கட்சிகளின் சாா்பில், புதன்கிழமை (டிச.24) 5 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, திமுக மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அவா்களின் அறிவுறுத்தலின் படியும், இளைஞா் அணி செயலா், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசையும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க.வையும் கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை(டிச.24) காலை 10 மணிக்கு, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில், கொட்டாரம் பெருமாள்புரத்திலும், தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் பூதப்பாண்டியிலும்,ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ராஜாக்கமங்கலம் சந்திப்பிலும், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் குருந்தன்கோடு சந்திப்பிலும், தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் - முளகுமூடு கோழிப்போா்விளை, என 5 இடங்களில், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அந்தந்த தி.மு.க. ஒன்றியச் செயலா்களின் தலைமையில் நடைபெறவுள்ளது என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com