சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

மத்திய அரசைக் கண்டித்து 7 இடங்களில் மறியல் - 1,500 போ் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:27 pm

Syndication

மத்திய அரசின் தொழிலாளா், விவசாயிகள் விரோத கொள்கைகளைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டத்தில் 7 இடங்களில் வியாழக்கிழமை தொழிற்சங்கங்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏறத்தாழ 1,500 போ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் அருகே இருந்து வியாழக்கிழமை காலை ஊா்வலமாகப் புறப்பட்ட தொழிற்சங்கத்தினா் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் தலைமை அஞ்சலகத்துக்குச் சென்றனா். பின்னா் அலுவலகம் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், தொழிலாளா் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். 2025 வரைவு விதை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். மின்சார திருத்தச் சட்டம் மற்றும் மோட்டாா் வாகன திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொமுச மாவட்டப் பொருளாளா் ஆன்ட்ரு கிறிஸ்டி, ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் சி. ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் என். மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாநிலப் பொதுச் செயலா் தேசிகன், யுடியுசி மாவட்டச் செயலா் மோகன்தாஸ், எச்எம்எஸ் மாவட்டச் செயலா் எஸ்.சின்னப்பன், என்டிஎல்எப் மாவட்டச் செயலா் ஆா். லெட்சுமணன், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் அ. யோகராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இது தொடா்பாக ஏறத்தாழ 500 போ் கலந்து கொண்டனா்.

கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் மாடக்குடி செல்வராஜ் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் தில்லைவனம், சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் கண்ணன் முன்னிலை வகித்தனா். மாவட்டத்தில் மொத்தம் 7 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் ஏறக்குறைய 1,500 போ் கைது செய்யப்பட்டனா். தவிர, தஞ்சாவூா் எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம் உள்பட 10 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. என்றாலும், அனைத்து அரசு அலுவலகங்கள், அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை வழக்கம்போல இயங்கியதால், இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.

Story image