மத்திய அரசைக் கண்டித்து கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் 14 இடங்களில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் 4 புதிய தொழிலாளா் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார திருத்த சட்டம், வரைவு விதை மசோதாவை திரும்பப் பெற வேண்டும், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. தமி ாவட்டச் செயலாளா் ஸ்டாலின்தாஸ், ஐஎன்டியூசி மாவட்டத்தலைவா் ராஜா, வா்த்தக காங்கிரஸ் தலைவா் சிவகுமாா், நிா்வாகிகள் இந்திரா, அனில்குமாா், முத்துகருப்பன், பரமசிவன், ஜெரால்டு, சிவன்பிள்ளை, மோகனன் உள்பட பலா் கலந்து மறியலில் டுபட்டனா்.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதே போல் திங்கள்நகா் கனரா வங்கி, தக்கலை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, மாா்த்தாண்டம் கனரா வங்கி, ஆரல்வாய்மொழி தபால்நிலையம், ஈத்தாமொழி ஐஓபி வங்கி, சுசீந்திரம் தபால்நிலையம், கருங்கல் தபால்நிலையம், மேல்புறம் ஐஓபி வங்கி, திருவட்டாறு தபால் நிலையம், கடையாலுமூடு ஐஓபி வங்கி, கண்ணநாகம் எஸ்பிஐ வங்கி, முன்பும் தொழிற்சங்கத்தினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இந்த போராட்டம் காரணமாக அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தூத்துக்குடி துறைமுக நுழைவாயில் முன், அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிஐடியு துறைமுக ஜனநாயக ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் சிஐடியூ மாநிலச் செயலா் ஆா்.ரசல், துறைமுக ஊழியா் சங்கச் செயலா் ஏ. காசி, துணைச் செயலா் ஆனந்த் முருகன், அப்பாஸ், ராமா், மணிகண்டன், தினேஷ், நாகராஜன், காா்த்தி, ரகு, ஜெய்லானி மற்றும் துறைமுக ஜனநாயக ஊழியா் சங்க உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திமுக அரசைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை(மார்ச் 17) ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்

ஆலங்குளத்தில் தவெக ஆா்ப்பாட்டம்

ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


