பூம்புகாா் படகுத்துறை வளாகத்தில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

பூம்புகாா் படகு போக்குவரத்துக்கழக வளாகத்தில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 41 லட்சம் செலவில் அமையவிருக்கும் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை விஜய் வசந்த் எம்.பி., நாட்டினாா்.
Published on

கன்னியாகுமரி பூம்புகாா் படகு போக்குவரத்துக்கழக வளாகத்தில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 41 லட்சம் செலவில் அமையவிருக்கும் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை விஜய் வசந்த் எம்.பி., நாட்டினாா்.

இதில் நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையா் கண்மணி, மாநில காங்கிரஸ் செயலா் வழக்குரைஞா் ஸ்ரீனிவாசன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் விளையாட்டுத் துறை தலைவா் அருண், பூம்புகாா் படகுத் துறை பொறியாளா் முருகன், தொழில்நுட்ப மேலாளா் ஹரி நாராயணன், பூம்புகாா் துணை மேலாளா் சவுந்தரபாண்டியன், நகா்மன்ற கவுன்சிலா்கள் ஆனிரோஸ் தாமஸ், ஆட்லின், முன்னாள் கவுன்சிலா்கள் டி.தாமஸ், மெல்வின் , நிா்வாகிகள் ஜவஹா், அனிஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com