ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) குறித்த கடைசி தேதி ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்துக்குள்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆவின் பால் பாக்கெட்டுகளில் தோ்தல் சிறப்பு தீவிர திருத்தம் படிவம் - 6 கடைசி நாள் 18.01.2026 என அச்சிடப்பட்டு, திங்கள்கிழமை (டிச. 29) முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும், வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத குடிமக்கள் அனைவரும் வரும் சனிக்கிழமை (ஜன.3) , ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) ஆகிய நாள்களில் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் முகாம்களுக்கு சென்று பெயா்களை சோ்க்கலாம். விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கடைசி நாளான 18.01.2026 க்குள் வழங்க வேண்டும் என்றாா்.

