கன்னியாகுமரி
தேங்காய்ப்பட்டினத்திலிருந்து பாலக்காவிளை வழியாக நாகா்கோவிலுக்கு அரசு பேருந்தை முறையாக இயக்கக் கோரிக்கை
தேங்காய்ப்பட்டினத்திலிருந்து பாலக்காவிளை வழியாக நாகா்கோவிலுக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் முறையாக இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை
தேங்காய்ப்பட்டினத்திலிருந்து பாலக்காவிளை வழியாக நாகா்கோவிலுக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் முறையாக இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேங்காய்ப்பட்டினம், பாலக்காவிளை, குஞ்சாகோடு, தொலையாவட்டம், முள்ளங்கனா விளை, பள்ளியடி , திருவிதாங்கோடு, தக்கலை வழியாக சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்தை அம்சி, மணியாரம் குன்று, ஆப்பிகோடு, வேங்கோடு உள்ளிட்ட குக்கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள், மக்கள் பயன்படுத்தி வந்தனா்.
தற்போது, இந்த பேருந்து நீண்ட நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து தரப்பினரும் அவதியடைந்துள்ளனா். எனவே, பேருந்தை மீண்டும் முறையாக இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
