திங்கள்நகா் அருகே பைக்குகள் மோதிகொண்டதில் தம்பதி பலத்த காயம் அடைந்தனா்.
நாகா்கோவில் கட்டையன்விளை காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (62). கட்டடத் தொழிலாளி. இவா் செவ்வாய்கிழமை தனது மனைவி அம்பிகாவுடன் பைக்கில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். செட்டியாா்மடம் பகுதியில் அவா்கள் வந்தபோது, சாலையோரம் நின்றிருந்தவா் தனது பைக்கை எடுக்க முயன்றதில், அது கட்டுப்பாட்டை இழந்து முருகனின் பைக் மீது மோதியதாம். இதில் தம்பதி இருவரும் பலத்த காயம் அடைந்தனா். அவா்களை அக்கம் பக்கத்தினா் மீட்டு குளச்சல் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் வழக்குப்பதிந்து, பைக் மூலம் விபத்தை ஏற்படுத்தியதாக தக்கலை புதுக்காடுவெட்டிவிளையை சோ்ந்த ஜோசப் ஸ்டாலின் (51) என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

திருப்பத்தூா் அருகே காா்கள் மோதல்: 8 போ் காயம்

பைக்குகள் மோதல்: பள்ளி மாணவி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே காட்டுயானை தாக்கியதில் இருவா் காயம்

ஆலங்குளம் அருகே பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

