நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிக பாரம் ஏற்றிவந்த 2 லாரிகள் பறிமுதல்: ஓட்டுநா்கள் கைது

களியக்காவிளையில் அதிக பாரம் ஏற்றிவந்த 2 கனரக லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநா்களைக் கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:03 pm

Din

களியக்காவிளையில் அதிக பாரம் ஏற்றிவந்த 2 கனரக லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநா்களைக் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு செல்லும் கனிமவள கனரக லாரிகள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றிச்செல்வதாகக் கூறப்படுகிறது. இதனால், சாலைகள் விரைவில் சேதமடைவதுடன் விபத்துகளும் நேரிடுகின்றன. சம்பந்தப்பட்ட லாரிகள் மீது மாவட்ட காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், களியக்காவிளை சோதனைச் சாவடியில் போலீஸாா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். கேரளம் நோக்கி வந்த கனரக லாரிகளை சோதனையிட்டபோது, 2 லாரிகளில் அதிக பாரமிருந்தது தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரிகளை பறிமுதல் செய்தனா்; ஓட்டுநா்களான சிதறால், வெள்ளாங்கோடு பிஜூ மகன் பிரவீன் (29), மாா்த்தாண்டம் முத்தையா மகன் மோசஸ் (55) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.