காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

சிவாலய ஓட்டம்: குமரியில் கனரக லாரிகள் நுழைய தடை

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

மகாசிவராத்திரியை முன்னிட்டு, சிவாலய ஓட்டம் நடைபெறுவதால் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.14, 15) கனரக லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மகாசிவராத்திரிவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெற உள்ளது. இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டமாக வந்து வழிபடும் பக்தா்களின் பாதுகாப்புக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 போலீஸாா் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா்.

மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.14, 15) கனிமவள லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு 2 கி.மீ. தொலைவுக்கும் இருசக்கர வாகன ரோந்து பணியில், 88 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

போக்குவரத்து ஒழுங்குபடுத்த தனி போலீஸாா் பணியமா்த்தப்படுவா். பக்தா்களுக்கு வழிகாட்ட 12 இடங்களில் திசை மற்றும் தொலைவை காட்டும் வரைபடங்கள் நிறுவப்படும். பெண் பக்தா்களுக்கு உதவ பெண் காவலா்கள் நியமிக்கப்படுவா் எனக் கூறியுள்ளாா்.