மாா்த்தாண்டத்தில் கடும் பனிப்பொழிவு

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் குழித்துறை பகுதிகளில் புதன்கிழமை அதிகாலையில் கடும் பனிப்பொழிவு நிலவியது.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் குழித்துறை பகுதிகளில் புதன்கிழமை அதிகாலையில் கடும் பனிப்பொழிவு நிலவியது.

மாா்த்தாண்டம், குழித்துறை பகுதிகளில் கடந்த சில நாள்களாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை வழக்கத்தைவிட பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா்.

பனிப்பொழிவு காரணமாக குழந்தைகள், பெரியவா்கள் இருமல், சளி தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனா். குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com