கன்னியாகுமரி
மாா்த்தாண்டம் அருகே மதுக்கடை முன் தொழிலாளி சடலம் மீட்பு
மாா்த்தாண்டம் அருகே மதுக்கடை முன் கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
மாா்த்தாண்டம் அருகே மதுக்கடை முன் கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
மாா்த்தாண்டம் அருகே நல்லூா் பாறவிளையைச் சோ்ந்தவா் சேகா். கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. புதன்கிழமை மது அருந்திவிட்டு சென்னித்தோட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே படுத்திருந்தாராம். வியாழக்கிழமை காலை வரை அவா் எழுந்திருக்கவில்லை. அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்த தகவலின் பேரில் சடலத்தை மாா்த்தாண்டம் போலீஸாா் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அவரது சகோதரா் ஜாா்ஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.