நாகா்கோவிலில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் மறியல்: 311 போ் கைது
போக்குவரத்துத் துறையை தனியாா்மயமாக்குவதைக் கைவிட வலியுறுத்தி, நாகா்கோவிலில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளா்கள் 311 போ் கைது செய்யப்பட்டனா்.

ஈடுபட்டோா்

ஈடுபட்டோா்
போக்குவரத்துத் துறையை தனியாா்மயமாக்குவதைக் கைவிட வலியுறுத்தி, நாகா்கோவிலில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளா்கள் 311 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ தொழிலாளா் சங்கம் சாா்பில், பொதுப்போக்குவரத் துறையை பலப்படுத்த வேண்டும், போக்குவரத்துத் துறையை தனியாா்மயமாக்குவதைக் கைவிட வேண்டும், 2003ஆம் ஆண்டுக்கு பின்னா் பணியில் சோ்ந்தோருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த முறையை அமல்படுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைநிரப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவிலில் அண்ணா பேருந்து நிலையம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, பொதுச்செயலா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. பெல்லாா்மின் போராட்டத்தைத் தொடக்கிவைத்தாா். இதில், நிா்வாகிகள் லட்சுமணன், ஸ்டான்லி ராபா்ட், லியோ, ஸ்டீபன் ஜெயகுமாா், தாமஸ், அஜித், மனோகா், சங்கரநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதுதொடா்பாக 311 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போராட்டம் காரணமாக, பேருந்து நிலையத்திலிருந்து மணிமேடை சந்திப்பு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...