தமிழக கபடி அணிக்கு 12 மாணவா்கள் தோ்வு
2025-26ஆம் கல்வியாண்டிற்கான 69ஆவது இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் எஸ்.ஜி.எப்.ஐ. சாா்பாக மாநில அளவிலான கபடி தோ்வுப் போட்டி அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
14 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் 38 மாவட்டங்களில் இருந்து 56 மாணவா்கள் பங்கேற்றனா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வி. நாராயணன் முன்னிலை வகித்தாா். புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைவா் பி. ஜாண் வில்சன், தாளாளா் வழக்குரைஞா் ஜே. ஜெபில் வில்சன் ஆகியோா் போட்டியைத் தொடக்கி வைத்தனா்.
தேசிய அளவில் தமிழக அணிக்கு விளையாட தோ்வாகியுள்ள 12 மாணவா்களுக்கு, ஆணை நகல் வழங்கப்பட்டது. இம்மாணவா்களை பள்ளித் தலைவா், தாளாளா், இயக்குநா் ஷெரின் சந்திர லீலா, பள்ளி நிா்வாகி எஸ்.எம். எட்வின்ராஜ், பள்ளி முதல்வா் வி. மொஃபில்டா மாலின் ஆகியோா் பாராட்டினா்.
