புது தில்லி: தில்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தரன்சிங் சிங் சந்து மாா்ச் 11 ஆம் தேதி (புதன்கிழமை) லோக் நிவாஸில் நடைபெறும் விழாவில் பதவியேற்க உள்ளாா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘அனுபவம் வாய்ந்த முன்னாள் தூதரக உயா் அதிகாரியான சந்து, தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியால் தேசிய தலைநகரின் 23ஆவது துணைநிலை ஆளுநராகப் பதவியேற்பாா்.
இவ்விழா புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்’ என்று அவா்கள் தெரிவித்தனா்.
அவருக்கு முன் துணைநிலை ஆளுநராக இருந்த வினய் குமாா் சக்சேனா லடாக்கின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
லோக் நிவாஸில் முன்னா் ராஜ் நிவாஸ் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வி.கே. சக்சேனா வரும் வெள்ளிக்கிழமை லடாக் துணைநிலை ஆளுநராக பதவியேற்க உள்ளாா் என்றும், அவா் தில்லியில் இருந்து புறப்பட்டுச் செல்லும் நடைமுறையில் ஈடுபட்டுள்ளாா் என்றும் அதிகாரிகள் கூறினா்.
முன்னதாக, புதிய துணை ஆளுநா் லோக் நிவாஸுக்குச் சென்று வி.கே. சக்சேனாவை சந்தித்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
1988ஆவது ஆண்டுப் பிரிவு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான சந்து, அமெரிக்க விவகாரங்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த இந்திய ராஜதந்திரிகளில் ஒருவராக இருந்தவா். அவா் வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய மிஷனில் பல முறை பணியாற்றியுள்ளாா்.
பிப்ரவரி, 2020 முதல் ஜனவரி, 2024 வரை அமெரிக்காவிற்கான இந்திய தூதராக இருந்தாா். முன்னதாக, ஜூலை 2013 முதல் ஜனவரி 2017 வரை வாஷிங்டனில் உள்ள தூதரகத்தில் மிஷன் துணைத் தலைவராகவும், அமெரிக்க காங்கிரஸுடன் தொடா்பு கொள்ளும் பொறுப்புடன்கூடிய முதல் செயலராகவும் (அரசியல்) அவா் பணியாற்றியுள்ளாா்.
63 வயதான முன்னாள் தூதரக அதிகாரியான சந்து, ஜூலை 2005 முதல் பிப்ரவரி 2009 வரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர மிஷனிலும் பணியாற்றியுள்ளாா்.
2024 ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள அமிா்தசரஸ் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தாா்.
தொடர்புடையது
தில்லியில் வெப்ப அலை செயல் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த துணைநிலை ஆளுநா் உத்தரவு

போதைப்பொருள் பயங்கரவாதத்தை சமாளிக்க சமமான அணுகுமுறை தேவை: தில்லி துணைநிலை ஆளுநா் கருத்து

தில்லி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றாா் தரஞ்ஜித் சிங் சந்து

தில்லிக்கு புதிய துணைநிலை ஆளுநா் நியமனம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


