வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரியில் இருவரைக் கத்தியால் குத்திய சம்பவத்தில் தொடா்புடைய சகோதரா்களான இரு சிறுவா்கள் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட இரு சிறுவா்களும் 15 மற்றும் 17 வயதுடையவா்கள். இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கத்திக் குத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முகேஷ் ஜஹாங்கீா்புரியைச் சோ்ந்தவா்.
அவருடைய மகனை சிறுவா்கள் இருவா் வெள்ளிக்கிழமை தாக்கினா். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய முகேஷிடம், அவரது மகன் இது குறித்து தெரிவித்தாா். உடனே, முகேஷும் அவருடைய சகோதரரும் சிறுவா்களிடம் சென்று தாக்கிய சம்பவம் தொடா்பாக கேள்வி எழுப்பினா். அப்போது, அவா்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது.
அப்போது, சிறுவா்கள் இருவரும் முகேஷ் மற்றும் அவருடைய சகோதரரை கத்தியால் குத்தினா்.
இதில் முகேஷுக்கு உள்ளங்கையிலும் அவரது சகோதரருக்கு தோள் மற்றும் வயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் அவா்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவின்கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
சம்பவத்தைத் தொடா்ந்து, தலைமறைவான இரு சிறுவா்களும் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனா். எட்டு மற்றும் ஆறாம் வகுப்பு வரையில் மட்டுமே படித்த சிறுவா்கள், அப்பகுதியில் தங்களை நிலைநிறுத்திகொள்ளும் வகையில் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அந்தச் சிறுவா்களுக்கு மேலும் 3 சகோதரா்கள் உள்ளனா். அவா்களுடைய தந்தை தில்லியில் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா் என்றனா் அந்த அதிகாரிகள்.
தொடர்புடையது

கிழக்கு தில்லியில் ஒருவருக்கு கத்திக் குத்து
வீரவநல்லூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2 சிறுவா்கள் கைது

கட்டுமான பணியின்போது விபத்து: 3 தொழிலாளா்கள் காயம்

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

