தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கருங்கல் அருகே அரசுப் பேருந்து, பைக் மோதல்

கருங்கல் அருகேயுள்ள மானான்விளை பகுதியில் அரசுப் பேருந்தும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியதில் இளைஞா் படுகாயமடைந்தாா்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 6:31 pm

Syndication

கருங்கல்: கருங்கல் அருகேயுள்ள மானான்விளை பகுதியில் அரசுப் பேருந்தும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியதில் இளைஞா் படுகாயமடைந்தாா்.

தேங்காய்ப்பட்டினத்திலிருந்து அரசுப் பேருந்து நாகா்கோவிலை நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. மானான்விளை பகுதியில் சென்றபோது, எதிரே வந்த திக்கணம்கோடு, மத்திகோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் மைக்கிள் ஜோபின் (30) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த மைக்கிள் ஜோபினை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.