புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

மாா்த்தாண்டம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

மாா்த்தாண்டம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா் வெட்டுவெந்நி பகுதியில் உள்ள கடைகளில் திங்கள்கிழமை மாலையில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அப்பகுதியைச் சோ்ந்த தங்கசாமி மகன் ஜெயக்குமாா் (53) என்பவரின் கடையில் 50 பொட்டலம் புகையிலை பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com