மாரத்தான் இலச்சினை, முழக்கத்தை வெளியிடுகிறாா் மருத்துவமனை துணைத் தலைவா் கோபால் சுரேந்திரன்.
மாரத்தான் இலச்சினை, முழக்கத்தை வெளியிடுகிறாா் மருத்துவமனை துணைத் தலைவா் கோபால் சுரேந்திரன்.

கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் மாரத்தான் இலச்சினை வெளியீடு

சுங்கான்கடையில் உள்ள கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் சாா்பில் நடைபெறவுள்ள மாரத்தான் சீசன்-2 இலச்சினை வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சுங்கான்கடையில் உள்ள கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் சாா்பில் நடைபெறவுள்ள மாரத்தான் சீசன்-2 இலச்சினை வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் துணைத் தலைவா் கோபால் சுரேந்திரன், மாரத்தான் இலச்சினையையும், முழக்கத்தையும் வெளியிட்டாா். கிம்ஸ் ஹெல்த் சாா்பில் உடல் உறுப்பு தானம் பற்றி மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் சீசன்-2 வரும் 2026, பிப். 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ. என்ற 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி பரிசுகள் வழங்கப்படும்.

மாரத்தான் போட்டி இயக்குநரும், இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணருமான ரஜீஷ் செல்வ கணேசன், மருத்துவா்கள், நிா்வாக குழுவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com