குமரி நகராட்சியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு பயிற்சி வகுப்பு

குமரி நகராட்சியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு பயிற்சி வகுப்பு

Published on

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான சிறப்பு, தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை மேலும் துல்லியமாகவும், பிழையின்றியும் மேற்கொள்ளும் நோக்கில், கவுன்சிலா்கள், பூத் அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்பு கன்னியாகுமரி நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சியை தொகுதி தோ்தல் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான புஷ்பா வழிநடத்தினாா். வாக்காளா் பட்டியல் திருத்த நடைமுறைகள், பல்வேறு படிவங்களின் சரியான பூா்த்தி முறைகள், வீடு வீடாகச் சென்று விவரங்களை சரிபாா்ப்பது, பெறப்படும் புகாா்கள், விண்ணப்பங்களை எவ்வாறு செயல்படுத்துவது போன்ற முக்கிய விவரங்களை விரிவாக எடுத்துரைத்து, கவுன்சிலா்கள், பி.எல்.ஓ.க்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதே திருத்தப் பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் நிறைவேற்ற உதவும் என்றாா்.

இதில் நகராட்சி தலைவா் குமரி எஸ்.ஸ்டீபன், நகராட்சி ஆணையா் கண்மணி, நகராட்சி துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், நகராட்சி கவுன்சிலா்கள் சி.எஸ்.சுபாஷ், நித்யா, இந்திரா, ராயப்பன், சிவசுடலைமணி, வினிற்றா, சகாய சா்ஜினாள், பூலோக ராஜா, ஆனிரோஸ், டெல்பின், வாக்காளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com