பைங்குளம், நாசரேத்தில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பைங்குளத்தில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் சனிக்கிழமை (நவ.15) நடைபெறுகிறது.
புதுக்கடை பேரூராட்சி, முன்சிறை, பைங்குளம், விளாத்துறை ஆகிய ஊராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில்
பைங்குளம் கே.ஏ.பி.டி. மெட்ரிக் பள்ளியில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை
நடைபெறுகிறது. முகாமில் பொதுமருத்துவம்,பேறுகால மருத்துவம்,குழந்தைநலமருத்துவம் உள்ளிட்ட
பல்வேறு சிறப்பு மருத்துவா்களால் நோய்கண்டறியப்பட்டு நோயாளிகளுக்கு உரியசிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட சுகாதார துறையினா் தெரிவித்தனா்.
இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் பல்வேறு நோய்களுக்கு சிறப்பு நிபுணா்களால் சிகிச்சை, ரத்தப் பரிசோதனை, இசிஜி உள்ளிட்ட ரூ.3000 மதிப்புள்ள பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றுகள் வழங்கப்படும். பயனாளிகள் ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்களை கொண்டு வர வேண்டும் என மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
