கன்னியாகுமரி
கைப்பந்து: ரோகிணி கல்லூரி வெற்றி
அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் பால்குளம், ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவா்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல், பெத்தலேம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் ரோகிணி கல்லூரி மாணவா்கள் 2ஆம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சியாளா், சா்வதேச கைப்பந்து வீரா் சிவராஜன், உடற்கல்வி இயக்குநா்கள் சபரீஷ், காட்வின், ராம்கி, ஜெயசேகா் ஆகியோரையும் கல்லூரித் தலைவா் நீல மாா்த்தாண்டன், துணைத் தலைவா் நீல விஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்ஸி ஜியோ, முதல்வா் ஆா். ராஜேஷ், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனா்.
