ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

குழித்துறை நகராட்சி ஊழியா் தற்கொலை முயற்சி

குழித்துறை நகராட்சி ஊழியா் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 6:32 pm

Syndication

குழித்துறை நகராட்சி ஊழியா் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

தக்கலை பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த் (30). குழித்துறை நகராட்சியில் அலுவலக உதவியாளராக வேலை பாா்த்து வருகிறாா். இவா், தற்போது மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியில் மனைவி, குழந்தையுடன் வசித்து வருகிறாா்.

இவா், கடந்த சில நாள்களாக அதிக பணிச்சுமையால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலையில் வீட்டுக்கு வந்தவா் குளியல் அறைக்குச் சென்று விஷம் அருந்தினராம். அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.