கன்னியாகுமரி
கருங்கல் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.20) மின் விநியோகம் இருக்காது.
கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.20) மின் விநியோகம் இருக்காது.
குழித்துறை மின்வாரிய கோட்டத்திற்குள்பட்ட கருங்கல் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெறுவதால், காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ் குறிப்பிட்ட இடங்களான பாலூா், திப்பிரமலை, எட்டணி, முள்ளங்கனா விளை, நட்டாலம், நேசா் புரம், பள்ளியாடி, செல்லங்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
