சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

களியக்காவிளை பேரூராட்சியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குழித்துறை அருகே வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 6:26 am IST

விளவங்கோடு ஊராட்சி, களியக்காவிளை பேரூராட்சிப் பகுதிகளில் பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

விளவங்கோடு ஊராட்சிக்குள்பட்ட குழித்துறை தீயணைப்பு நிலையம் அருகிலிருந்து தொடங்கிய வாகனப் பிரசாரம் பழவாா், பாலவிளை, ஈத்தவிளை, படந்தாலுமூடு, திருத்துவபுரம், எருத்தாவூா், மீனச்சல், குந்நுவிளை, களியக்காவிளை, மேக்கோடு, தூப்புறமூலை, பரக்குன்று, மலையடி பகுதி வழியாக மூவோட்டுக்கோணம் பகுதியில் நிறைவடைந்தது.

தொடக்க நிகழ்வில், மேல்புறம் ஒன்றிய அதிமுக செயலா் ஷைன் ஜோஸ், அண்ணா தொழிற்சங்க மேற்கு மாவட்டச் செயலா் ஆா். பீட்டா், மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன், மத்திய அரசு வழக்குரைஞா் சி.எம். சஜூ, பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் விஜயபிரசாத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.