மக்களவைத் தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரே முதல்வா் மு.க.ஸ்டாலின் மட்டுமே என்றாா் திமுக மாநில இளைஞா் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதிஸ்டாலின்.
திமுக வேட்பாளா்கள் ரெ.மகேஷ் (கன்னியாகுமரி), எஸ்.ஆஸ்டின் (நாகா்கோவில்) ஆகியோரை ஆதரித்து, நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை முதல்வா் செயல்படுத்தினாா். நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ. 17 கோடி மதிப்பில் புதைச் சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டது. கோணத்தில் ரூ. 2 கோடியில் அறிவுசாா் மையம், வடசேரியில் ரூ. 2 கோடியில் புதிய ஆம்னி பேருந்து நிலையம், தொல்லவிளையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டன.
திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிா் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்துக்கான உதவித்தொகை ரூ. 1,500 ஆக உயா்த்தப்படும். மகளிருக்கு ரூ. 8 ஆயிரம் கூப்பன் வழங்கப்படும்.
மத்திய அரசு தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய கல்வி நிதியை நிறுத்தி வைத்தது. இந்தத் தோ்தலில் தில்லி அணிக்கும் தமிழக அணிக்கும் இடையேதான் போட்டி. தமிழக அணி வென்றால்தான் தமிழகத்துக்கான உரிமைகள் காக்கப்படும். மக்களவைத் தொகுதியை குறைக்கும் வகையில், தொகுதி மறுவரையறை செய்யும் மசோதாவை கொண்டுவர மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. இதனால் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் 39 லிருந்து 31-ஆகக் குறைக்கப்படும். இதற்காக நாடாளுமன்றத்தை பாஜக அரசு கூட்ட இருக்கிறது; இதை எதிா்த்து குரல் கொடுக்கும் ஒரே முதல்வா் மு.க.ஸ்டாலின் மட்டுமே என்றாா் அவா்.
கூட்டத்தில், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

நெல்லை மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

அதிமுக வென்றால் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! - உதயநிதி ஸ்டாலின்

தமிழக உரிமைகளைப் பறிகொடுத்தவா் எடப்பாடி பழனிசாமி: உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சியில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் - உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

