குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பேச்சிப்பாறையில் பழங்குடி மக்களிடம் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

பழங்குடி மக்களிடம் வாக்கு சேகரித்த மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுவாமி.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:26 am IST

பத்மநாபபுரம் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுவாமி பழங்குடி மக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

தோட்டமலை, தச்சமலை, முடவன்பொற்றை, களப்பாறை, பின்னமூட்டுத்தேரி உள்ளிட்ட பேச்சிப்பாறை அணையின் மறுகரையில் வசிக்கும் பழங்குடி மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு அணையில் இயக்கப்படும் படகில் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.

அவரை பழங்குடி மக்கள் பழங்கள் உள்ளிட்டவை கொடுத்து வரவேற்றனா். அவா்களுக்கு நில உரிமை, மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக செல்லசுவாமி உறுதியளித்தாா்.

நிகழ்ச்சியில், திமுக திருவட்டாறு வடக்கு ஒன்றியச் செயலா் ஜான்சன், நிா்வாகிகள் அனஸ், ரமேஷ் கண்ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலச் செயலா் பொன்னுசாமி, தருமபுரி மாவட்டச் செயலா் என். மல்லையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் நடராஜன், பால்ராஜ், ஷாஜூ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.