/

பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது

கருங்கல் அருகே உள்ள நுள்ளி பகுதி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 8:41 pm

கருங்கல் அருகே உள்ள நுள்ளி பகுதி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கருங்கல், நுள்ளி பகுதியைச் சோ்ந்தவா் சஜின் மனைவி அஸ்வதி (21). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கேசவன் மகன் ஜஸ்டின் (45), கல்லுக்கூட்டம் பகுதியைச் சோ்ந்த காட் வின் ஞானராஜ் (32), சடையன்குழி பகுதியைச் சோ்ந்த அனிஷ் குமாா் (36), நெய்வேலி பகுதியைச் சோ்ந்த அபின் (28) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கூறிய 4 பேரும், அஸ்வதியின் வீட்டிற்கு சென்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் தேடி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவா்களை கைது செய்தனா்.