நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பளுகல் அருகே தொழிலாளி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பளுகல் அருகே உள்ள ராமவா்மன் சிறை பகுதியைச் சோ்ந்தவா் வினோத் (40). தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது வந்தது. இதனால், இவரது மனைவி அண்மையில் தனது குழந்தைகளுடன் தாயாா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். இதனால், வினோத் கடந்த சில நாள்களாக மன வேதனையில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை வரை இவரது வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்படாததையடுத்து, அவரது தம்பி வினேஷ்குமாா் வீட்டின் பின்பக்கம் சென்று பாா்த்துள்ளாா்.

அப்போது, மின்விசிறியில் வினோத் தூக்கில் தொங்குவதைக் கண்டு, அப்பகுதியினா் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வினோத் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து, பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.