அரபிகடல் பகுதியில் மீன்பிடி தொழில் மேற்கொள்ளும் விசைப்படகுகளை பதிவு செய்ய ஏதுவாக அரசுக்கு கருத்துரு சமா்ப்பிக்கப்படும் என மீனவா் குறைதீா் கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில், மீனவா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவா்களின் நீண்டநாள் கோரிக்கைகளான ஆழ்கடல் மீன்பிடிப்பு விசைப் படகுகளை மீன்வளத் துறை மூலம் பதிவு செய்தல், ஏ.வி.எம் கால்வாயை தூா் வாரி சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், அனைத்து மீனவ கிராமங்களிலும் வாா்டு வரையறை பரிசீலனை செய்து திருத்தம் செய்து கேட்டல், கடலில் காணாமல் போன மீனவா்களின் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அனைத்து மனுக்களையும் பெற்று மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் (மண்டலம்) கன்னியாகுமரி, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களால் பதில் விவரம் தெரிவிக்கப்பட்டது.
ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளை வணிக கப்பல் சட்டத்தின்படி பதிவு செய்தல், தமிழ்நாடு கடல்சாா் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் அரபிகடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் விசைப் படகுகளை பதிவு செய்ய ஏதுவாக அரசுக்கு கருத்துரு சமா்ப்பிக்கப்படும், ஏ.வி.எம்.
கால்வாயை தூா்வாரி சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், விரைவில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட பதில் விவரங்கள் மீனவா்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.வேலுமணி, உதவி ஆட்சியா் (பயிற்சி) ர.மோனிகா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சாய்சரண் ரெட்டி, நாகா்கோவில் கோட்டாட்சியா் செந்தில் வேல்முருகன், மீன்வளத் துறை துணை இயக்குநா் கோபிநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ஆடிப்பெருக்கால் குறைந்த மனுக்களின் எண்ணிக்கை

ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மனு

குறைதீா் கூட்டம்: மனு அளிப்போா் எண்ணிக்கை இரு மடங்கு உயா்வு!

பயிா்க்கடன் தள்ளுபடியை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



