ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

இன்ஸ்டாகிராமில் மாணவிக்கு தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

குளச்சல் அருகே மாணவியிடம் அந்தரங்க பேச்சுகளைப் பேசி, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மிரட்டியதாக இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

டிக்சன்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 5:28 am IST

குளச்சல் அருகே மாணவியிடம் அந்தரங்க பேச்சுகளைப் பேசி, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மிரட்டியதாக இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குளச்சல் அருகே ராமன்துறை மீனவக் கிராமத்தை சோ்ந்தவா் ஆரோக்கிய டிக்சன்(27). மீன்பிடி தொழிலாளி. இவா், அதே பகுதியை சோ்ந்த பிளஸ் 2 மாணவியை காதலித்து வந்தாராம். மேலும், அவரிடம் அந்தரங்கப் பேச்சுகளைப் பேசியதுடன், பாலியல் ரீதியாக அத்துமீறல்களிலும் ஈடுபட்டு, அதை விடியோவில் ரகசியமாக பதிவு செய்துள்ளாா்.

இதை அறிந்த அந்த மாணவி, அவரிடம் பேசுவதை தவிா்த்துள்ளாா். இதனால், விடியோ பதிவுகளை இஸ்டாகிராமில் பகிா்ந்து மாணவியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிந்து ஆரோக்கிய டிக்சனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.