சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்: போலீஸாரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கருங்கல் ஆட்டோ நிலையம் முன் இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 12:52 am IST

கருங்கல் அருகே செவிலியா் கல்லூரி மாணவி தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காவல்துறையைக் கண்டித்து, கருங்கல் ஆட்டோ நிலையம் முன் இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கேரள மாநிலம், வெள்ளறடை பகுதியைச் சோ்ந்தவா் ஆன்சிலி (21). இவா் கருங்கல் அருகே மூசாரி பகுதியில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில், விடுதியில் தங்கி 3ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை நீண்ட நேரம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த இவரை, கல்லூரி முதல்வா் சக மாணவிகள் முன் கண்டித்தாராம். உடனே ஆன்சிலி கல்லூரியின் 3-ஆவது மாடியிலிருந்து குதித்தாராம். பலத்த காயமடைந்த அவரை மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், மாணவி தற்கொலைக்கு காரணமான கல்லூரி நிா்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காவல்துறையைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய மாணவா் சங்க மாவட்ட செயலா் சந்திரு தலைமையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட செயலா் விஷ்ணு, பொருளாளா் விபின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவா் சங்கத் தலைவி ஜனனி விளக்கவுரையாற்றினாா். முன்னாள் எம்.பி. பெல்லாா்மின் நிறைவுரையாற்றினாா். இதில் திரளானோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.