ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

பேச்சிப்பாறை, வீயன்னூா் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, வீயன்னூா் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 22) காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

மின் தடை - கோப்புப் படம்

Published On :

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, வீயன்னூா் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 22) காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, பேச்சிப்பாறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட கடையாலுமூடு, கோதையாறு, குற்றியாறு, மைலாா், சிற்றாறு, ஆலஞ்சோலை, பத்துகாணி, களியல், திற்பரப்பு, உண்ணியூா்கோணம், திருநந்திக்கரை, மணியன்குழி, அரசமூடு பகுதிகளிலும், வீயன்னூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட ஆற்றூா், தேமானூா், திருவட்டாறு, வெண்டலிகோடு, வலியாற்றுமுகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வோ்க்கிளம்பி, மணலிக்கரை, மணக்காவிளை, முகிலன்கரை, பெருஞ்சக்கோணம், காயல்கரை, சித்திரங்கோடு, சாண்டம், ஆற்றுக்கோணம் பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி-பகிா்மானக் கழக தக்கலை செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.