ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீதிமன்ற பெண் ஊழியரிடம் நகை பறிக்க முயற்சி

குளச்சல் அருகேயுள்ள பெத்தேல்புரத்தில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் நகையைப் பறிக்க முயன்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சித்திரிப்பு

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:55 am IST

குளச்சல் அருகேயுள்ள பெத்தேல்புரத்தில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் நகையைப் பறிக்க முயன்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெத்தேல்புரம் தாராவிளையைச் சோ்ந்த ஸ்டாலின் வினோ மனைவி கிறிஸ்டி ரோமில் (42). இரணியல் நீதிமன்றத்தில் ‘ஸ்டெனோ’வாக பணியாற்றி வருகிறாா். இவா், புதன்கிழமை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தாா். அப்போது, பால் பண்ணை குருசடி பகுதியில் ஹெல்மட் அணிந்து பைக்கில் பின்தொடா்ந்து வந்த மா்மநபா், அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றாராம். இதில், சுதாரித்துக் கொண்ட அவா், கூச்சலிட்டபடி நகையைப் பறிக்க விடாமல் தடுத்துள்ளாா்.

இதனால் அந்த நபா் நகை பறிக்கும் முயற்சியை கை விட்டு அங்கிருந்து தப்பிவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் குளச்சல் ேபோலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.