ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது

களியக்காவிளை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

தொழிலாளி மணிகண்டன்

Published On :

களியக்காவிளை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு மாணவி, தனது தாய் இறந்ததையடுத்து பாட்டியின் பராமரிப்பில் உள்ளாா். இவரது வீட்டுக்கு படந்தாலுமூடு, போற்றிவிளை பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மணிகண்டன் (50) அடிக்கடி வந்து சென்றாராம். வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி, பல முறை பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இந்நிலையில் அண்மையில் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், இதுகுறித்து மாணவி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து குழந்தைகள் நலன் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.